Nelliady.Com

Click here to edit subtitle

GuruPeyerchi 2013

மனிதர்க்கு வாழ்க்கையை சாதகமாகவும், பாதகமாகவும் உருவாக்கி வழிநடத்துபவர்கள் நவக்கிரகங்கள் என்று ஜாதக ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதில் குரு என அழைக்கப் படும் வியாழ பகவான் எதிர்வரும் மே 28ம் திகதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். 

ஒவ்வொருவரின் ஜாதக நிலவரப்படி பன்னிரெண்டு ராசிக்கு உரியவர்களின் அவரவர் வீடுகளில் குருபகவான் எப்படி இடம்பெயர்ந்து அவர்களூக்கு எப்படியான பலன்களைத் தரப்போகிறார் எனப்பார்ப்போம். அதற்கு முன் குருவைப் பற்றிப் பார்ப்போம் :

குரு பார்த்தால் கோடி நன்மை என்று குருபகவானைத் துதி செய்வர். மானிடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மாதாவின் வயிற்றில் பிறந்து, பிதாவால் வளர்ந்து, குருவினால் ஆறறிவை விருத்தி செய்து, தெய்வத்தின் வழி  காட்டலில் நெறிமுறை தவறாது வாழ வழி காட்டுவது குருவெயாகும். எல்லோர்க்கும் குரு இருப்பார். சிலருக்கு தாய் குருவாகவும், சிலருக்கு தந்தை குருவாகவும், சிலருக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் குருவாகவும், சிலருக்கு சகோதரர் குருவாகவும், சிலருக்கு மதத்தலைவர்கள் குருவாகவும்,  சிலருக்கு வயதில் மூத்தவர்கள் குருவாகவும், அமைந்து விடுகின்றனர். ஆனாலும் எல்லாம் அறிந்தவர்,எங்கும் நிறைந்தவர் உள்ளேயும், வெளியேயும்  கலந்து நிற்பவர் குருவுக்கு குருவானவர். அவர் ஆலமர் கடவுள் என்றும் குருந்த மரநிழலில் தெற்கு நோக்கி வீற்றிருந்து சின்முத்திரை காட்டி  அருளி நான்மறைகளை சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கு போதித்தருளியவர்.

இறைவனே குருவாகி வந்து எமக்கு போதித்து வேதங்களையும் சைவசித்தாந்தகளையும் கட்டிக்காத்திட உதவியவர். அப்படிப்பட்ட குரு தெட்சணா மூர்த்தியையும் வியாழபகவானையும்  வழிபட்டால் அநேக நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

தஷிணாமூர்த்தி தன் பக்தர்களுக்கு  மங்களகரமான சின் முத்திரையினால் குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம், விழிப்பு, சொப்பனம் முதலிய  மாறுபாடுகள் யாவற்றினூடேயும் நானே உள்ளேன் என என்றும் மாறுபடாமல் இருக்கும் தன்னையே குருவாக வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

ஷிசணா மூர்த்தி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் குருபகவானின் சிறப்பை இவ்வாறு பூரணமாக எடுத்து இயம்புகிறார்.

'மெளன வ்யாக்யா ப்ரகடித பரப்ரம்ஹ தத்வம் யுவானம் வர்ஷிஷ்டாந் தேவதஸத் ருஷிகணை ராவ்ருதம் ப்ரஹ்மநிஷ்டை
ஆசார்யேந்த்ரம் கரகலித் சின் முத்ர மானந்தரூபம் ஸ்வார்த்தமாராமம் முதிதவ தனம் தஷினாமூர்த்தி மீடே'.

இதன் விளக்கம் :

மெளனமான விளக்கத்தினால் பரப்பிரம்ம தத்துவத்தை பிரதிபலித்துக் கொண்டு,  இந்த யுகங்களின் வடிவினராக,  பிரம்மநிஷ்டர்கள், ரிஷிகள் சீடர்களாகச் சூழ்ந்திருக்க ஆனந்தரூபியாக, தன் ஆன்மாவினூடாக ரசிக்கக்கூடியவராக புன்னகை தவழும் தஷிணாமூர்த்தியைப் போற்றுகிறேன் என்பதாகும்.

வியாழ பகவான் பொருட் செல்வம், குழந்தைச் செல்வம் ஆகியவற்றை மனிதர்க்கு கொடுப்பதற்கு  காரணமானவர். அதனால்தான் தனகாரகன், என்றும் புத்திர காரகன் என்றும் வியாழகுருவை அழைப்பர். அவர் பெயர்ச்சி அடைகிற போது அவர் இருக்கும் வீட்டைப் பொறுத்தே நன்மைகள் தீமைகள் பன்னிரண்டு ராசிக்கும் நடக்கின்றன.

 மே 28ம் திகதிக்கு பின்னர் மேஷராசிக்கு 3ம் வீட்டிலும், இடப ராசிக்கு 2ம் வீட்டிலும், மிதுனராசிக்கு 1ம் வீட்டிலும் கடகராசிக்கு 12ம் வீட்டிலும், சிம்மராசிக்கு 11ம் வீட்டிலும் கன்னிராசிக்கு 10ம் வீட்டிலும் துலா ராசிக்கு 9ம் வீட்டிலும், விருச்சிகராசிக்கு 8ம்வீட்டிலும், தனுசுராசிக்கு 7ம் வீட்டிலும் மகரராசிக்கு 6ம் வீட்டிலும் கும்ப ராசிக்கு 5ம் வீட்டிலும், மினராசிக்கு 4ம் வீட்டிலும் பெயர்ச்சி அடைந்து குரு பகவான் வீற்றிருக்கப் போகிறார்.

மே. 28 குரு இடப்பெயர்சியினால் உங்கள் ராசிகளுக்குரிய பலன்கள் எவ்வாறு மாற்றமடையப் போகின்றன என இங்கு பாருங்கள் :

Oops! This site has expired.

If you are the site owner, please renew your premium subscription or contact support.